
SA vs IND: Learning From The Loss In First Test Prepares Us For The Victory, Says Dean Elgar (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது. அதிலும் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்த பட்சத்திலும், அடுத்தடுத்த போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை வென்றது.
இந்நிலையில், இந்தியாவுடனான முதல் போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் தான் எங்களது வெற்றிக்கு உதவியது என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.