புஜாரா, ரஹானேவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தான் இருக்கு - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக சொதப்பிவரும் புஜாரா, ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களுக்கும் இன்னும் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே வாய்ப்பு; அதிலும் சொதப்பினால் அவர்களது டெஸ்ட் கெரியர் முடிந்துவிடும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடித்தது.
மேலும் இந்திய அணியின் இந்த மோசமான ஸ்கோரிற்கு மிடில் ஆர்டரில் முக்கியமான மற்றும் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் படுமோசமாக ஆட்டமிழந்ததால் தான் முக்கிய காரணம்.
Trending
புஜாரா, ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களும் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக விளையாடவில்லை. ஆனாலும் அவர்களின் கடந்த கால பங்களிப்பை மனதில் வைத்து, அதற்கு மதிப்பளிக்கும் விதமாக அவர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது.
ஆனால் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மிக அதிகமானவை என்று தெரிந்தும் கூட தொடர்ந்து சொதப்புவதால், வாழ்வா சாவா என்ற நிலையில், கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் இந்த போட்டியிலும் ஏமாற்றமளித்தனர்.
இந்நிலையில், இந்த போட்டியின் 2ஆவது இன்னிங்ஸ்தான் அவர்கள் இருவருக்குமான கடைசி வாய்ப்பு என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “இந்த டெஸ்ட்டின் அடுத்த இன்னிங்ஸ் மட்டுமே புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவருக்கும் அவர்களது டெஸ்ட் கெரியரை காப்பாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பு. தொடர்ச்சியாக சொதப்பிவரும் அவர்களுக்கு அவர்களது டெஸ்ட் கெரியரை காப்பாற்றிக்கொள்ள இன்னும் ஒரேயோரு இன்னிங்ஸ் மட்டுமே வாய்ப்பு. அதிலும் சொதப்பினால் அணியில் அவர்களுக்கான இடம் சந்தேகம் தான்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now