
SA vs IND UPDATE: Kagiso Rabada Released From South Africa Squad For ODI Series Against India (Image Source: Google)
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என தென் ஆப்பிரிக்கா வென்றது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.
அத்னன்படி முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 19) பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியிலிருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விடுவிக்கப்பட்டுள்ளார்.