Advertisement
Advertisement
Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 08, 2024 • 01:17 PM

South Africa Women vs Scotland Women Dream11 Prediction, T20 World Cup 2024:  ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 08, 2024 • 01:17 PM

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணியானது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் வலிமை வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை ஸ்காட்லாந்து அணி எவ்வாறு சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

SA W vs SCO W World Cup Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்க மகளிர் vs ஸ்காட்லாந்து மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.09 மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

SA W vs SCO W T20I Pitch Report

தென் ஆப்பிரிக்க - ஸ்காட்லாந்து மகளிர்ர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 101 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 46 முறையும், சேஸிங் செய்த அணி 54 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SA W vs SCO W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 00
  • தென் ஆப்பிரிக்க  மகளிர் அணி - 00
  • ஸ்காட்லாந்து மகளிர் அணி - 00

SA W vs SCO W T20I Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

South Africa Women Women vs Scotland Women Probable Playing XI

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: லாரா வோல்வார்ட் (கே), டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் கேப், அன்னேக் போஷ், சுனே லூஸ், சோலி ட்ரையன், நதின் டி கிளெர்க், அன்னேரி டெர்க்சன், சினாலோ ஜாஃப்டா, நோன்குலுலேகோ மலாபா, அயபோங்கா காக்கா

ஸ்காட்லாந்து மகளிர் அணி: சாஸ்கியா ஹார்லி, சாரா பிரைஸ், கேத்ரின் பிரைஸ் (கே), ஐல்சா லிஸ்டர், பிரியனாஸ் சட்டர்ஜி, டார்சி கார்ட்டர், லோர்னா ஜாக், கேத்ரின் ஃப்ரேசர், ரேச்சல் ஸ்லேட்டர், அப்தாஹா மக்சூத், ஒலிவியா பெல்.

SA W vs SCO W T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சாரா பிரைஸ்
  • பேட்ஸ்மேன்கள்- லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், பிரியனாஸ் சட்டர்ஜி, ஜல்சா லிஸ்டர்
  • ஆல்-ரவுண்டர்கள் - மரிஸான் கேப்(துணை கேப்டன்), அன்னேரி டெர்க்சன், கேத்ரின் பிரைஸ், சாஸ்கியா ஹார்லி
  • பந்துவீச்சாளர்கள் – அயபோங்கா காக்கா, ஒலிவியா பெல்

SA W vs SCO W T20I Dream11 Prediction, SA W vs SCO W Dream11 Team, Fantasy  Cricket Tips, SA W vs SCO W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa Women vs Scotland Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement