எஸ்ஏ20 2024: மார்க்ரம், அபெல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்கு 176 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரைப் போலவே கடந்தாண்டு தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட எஸ்ஏடி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
செயிண்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய் ஜோர்டன் ஹார்மேன் 2 ரன்களுக்கும், டேவிட் மாலன் 18 ரன்களுக்கும் என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டாம் அபெல் - கேப்டன் ஐடன் மார்க்ரம் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
Trending
இதில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி டாம் அபெல் அரைசதம் கடந்த நிலையில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 60 ரன்களைச் சேர்த்து கீரென் பொல்லார்ட் பந்துவீச்சி விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸும் தனது பொறுப்பை உணர அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் அதிரடியாக விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் 29 பந்துகளில் அரைசதம் கடந்த கையோடு 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து 23 ரன்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. கேப்டவுன் அணி தரப்பில் நுவான் துஷாரா, காகிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now