
Cricket Image for சச்சினுக்கு கரோனா; ரசிகர்கள் அதிர்ச்சி! (Sachin Tendulkar (Image Source: Google))
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனையில் கரோனா பாதிப்பு
உறுதியாகி உள்ளது. இதனால் வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதேசமயம் அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும்
கரோனா பாதிப்பு இல்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இம்மாதம் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் விழிப்புணர்வு
கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தசலைமையிலான இந்தியா லெஜெண்ட்ஸ் அணி
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.