
கிரிக்கெட்டின் கடவுள் என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். 17 வயது முதல் கிரிக்கெட் ஆடிய சச்சின் இதுவரையில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இந்நேரம் வரையில் அந்த சாதனைகளை முறியடிக்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தடுமாறிவருகின்றனர். ஓய்வு பெற்று ஆண்டு கணக்கானாலும் சச்சினின் ரசிகர்கள் இன்றும் அவரது ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.
இந்நிலையில், அவர்களையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது ஒரு விளம்பரம். பொதுவாக போதை பொருட்கள், சூதாட்டம் உள்ளிட்ட விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்துவரும் சச்சினின் புகைப்படத்தை ஆன்லைன் விளம்பரத்தில் பயன்படுத்தி உள்ளது ஒரு சூதாட்ட நிறுவனம். இந்த ஆன்லைன் விளம்பரத்தை பார்த்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவாவை மையமாகக்கொண்டு இயங்கிவரும் பிக் டாடி (Big Daddy) கேசினோ மையத்தின் ஆன்லைன் விளம்பரத்தில் தான் சச்சினின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் இடம்பெற்று இருந்தது.