Advertisement

இப்போ இருக்க ரூல்ஸ்லாம் அப்ப இருந்திருந்தால் சச்சின் ஒரு லட்சம் ரன் அடித்திருப்பார் - சோயிப் அக்தர்

இப்போதிருக்கும் ரிவியூ ரூல்ஸ் எல்லாம் சச்சின் டெண்டுல்கர் காலத்தில் இருந்திருந்தால், அவர் ஒரு லட்சம் ரன் அடித்திருப்பார் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 28, 2022 • 18:18 PM
'Sachin would have made 1 lakh runs': Shoaib Akhtar slams ICC for extra leverage to batters in curre
'Sachin would have made 1 lakh runs': Shoaib Akhtar slams ICC for extra leverage to batters in curre (Image Source: Google)
Advertisement

கிரிக்கெட் விதிகள் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்துவருகிறது என்ற கொதிப்பும் ஆதங்கமும் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உண்டு. அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக மாறிவிட்டது.

குறிப்பிட்ட சில ஓவர்களில் ஃபீல்டிங் கட்டுப்பாடுகள், ரிவியூ ஆப்சன்கள், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள் ஆகிய விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக எப்போதுமே விமர்சித்துவந்திருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். 

Trending


இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடனான தனது யூடியூப் சேனல் உரையாடலின்போதும் இதுகுறித்து பேசினார் அக்தர்.

அப்போது பேசிய அக்தர், ”இப்போதெல்லாம் 2 புதிய பந்துகள் கொடுக்கப்படுகின்றன. விதிகளை கடுமையாக்க வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகவே விதிகள் வகுக்கப்படுகின்றன. சச்சின் டெண்டுல்கர் ஆடிய காலக்கட்டத்தில் ரிவியூ கொடுக்கப்பட்டிருந்தால், சச்சின் ஒரு லட்சம் ரன் அடித்திருப்பார். 

இந்த விஷயத்தில் தான் சச்சினை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கும். சச்சின் டெண்டுல்கர், அவரது கெரியரில், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸை எதிர்கொண்டிருக்கிறார்; ஷேன் வார்னுக்கு எதிராக ஆடியிருக்கிறார். பின்னர் பிரெட் லீ, அக்தரை எதிர்கொண்டிருக்கிறார். அதன்பின்னர் அடுத்த தலைமுறை ஃபாஸ்ட் பவுலர்களையும் எதிர்கொண்டு ஆடியிருக்கிறார். எனவே தான் சச்சின் டெண்டுல்கரை மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்று கூறுவதாக அக்தர் தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement