-mdl.jpg)
SL vs BAN, Asia Cup 2023: வங்கதேசத்திற்கு 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை! (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி, வங்கதேச அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.