
Saint Lucia Kings Take On Knight Riders In 1st Semi-Final Of CPL 2021 (Image Source: Google)
விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசன் வாரியர்ஸ், செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ், செயிண்ட் லூசியா கிங்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் டிரின்பாகோ நைட்ரைடஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. கடந்தாண்டு சிபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதியது.
அதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இதனால் இப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி வெற்றிபெற்று தோல்விக்கு பழித்தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.