
Sakibul Ghani Creates World Record On Ranji Trophy Debut (Image Source: Google)
பிளேட் குரூப்பில் பிகார் - மிசோரம் இடையிலான ரஞ்சி போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பிகார் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதில் பிகார் அணியின் நடுவரிசை வீரராகக் களமிறங்கிய 22 வயது சகிபுல் கனி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது அவருடைய அறிமுக முதல்தர ஆட்டம்.
இந்நிலையில் அறிமுக முதல்தர ஆட்டத்திலேயே முச்சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தி இந்திய கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இதற்கு முன்பு, 2018இல் மத்தியப் பிரதேசத்தின் அஜய் ரொஹேரா 267* ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. சகிபுல் கனி, 387 பந்துகளில் 50 பவுண்டரிகளுடன் முச்சதம் அடித்தார்.