
Sakshi shares latest update on MS Dhoni's parents health after they test positive for COVID-19 (Image Source: Google)
இந்திய அணி முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த ஃபினீஷருமானவர் மகேந்திர சிங் தோனி. இவர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தோனியின் பெற்றோர் தேவகி, பான் சிங் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் பெற்றோர்கள் உடல்நலம் குறித்து அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி தனது சமூக வலைதளப்பதில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், 'தோனி பெற்றோர் நலமாக உள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை தரப்பட்டு வருகிறது. உங்கள் பிரார்த்தனையால் அவர்கள் விரைவில் குணமடைவர். அனைவருக்கும் நன்றி,' என தெரிவித்துள்ளார்.