
ஐபிஎல் 15ஆவது சீசனில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னதாக காயத்தால் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியே அவரை கழட்டிவிட்டது. ஆனால் இந்தாண்டு தரமான கம்பேக் கொடுத்தார். பேட்டிங்கில் 15 இன்னிங்ஸில் 487 ரன்களை குவித்துள்ளார். பந்துவீச்சிலும் 8 முக்கிய விக்கெட்களை சாய்த்து அசத்தியுள்ளார்.
கேப்டனாகவும் தனது அணிக்கு கோப்பை வென்று கொடுத்துவிட்டார். பவுலிங்கில் பாண்ட்யா செய்யும் மாற்றங்கள் மற்றும் பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே பொறுப்பை ஏற்றுக்கொண்டு சென்றது என ஹர்திக் பாண்டியா ஜொலித்தார். இதே போன்று களத்தில் அவர் அமைதியாக செயல்பட்ட ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது.