Advertisement

ஐபிஎல் 2022: எங்கள் வெற்றிக்கு காரணம் அவர் தான் - சஞ்சு சாம்சன் பாராட்டு!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்திய சாஹலை, ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

Advertisement
Sanju Samson calls Yuzvendra Chahal 'greatest legspinner'
Sanju Samson calls Yuzvendra Chahal 'greatest legspinner' (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 11, 2022 • 12:40 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 11, 2022 • 12:40 PM

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக சிம்ரன் ஹெட்மயர் 59* ரன்களும், தேவ்தத் படிக்கல் 29 ரன்களும் எடுத்தனர்.

Trending

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு கே.எல் ராகுல் (0), டி காக் (39), கிருஷ்ணப்பா கவுதம் (0), ஜேசன் ஹோல்டர் (8), அயூஸ் பதோனி (5) போன்ற நட்சத்திர வீரர்கள் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீடீரென போட்டியின் 19வது ஓவரில் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடிய 18 ரன்கள் குவித்தார், இதனால் கடைசி ஒரு ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், லக்னோ அணிக்கு எதிரான இந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டனான கே.எல் ராகுல், 4 விக்கெட் வீழ்த்தி அசத்திய யுஸ்வேந்திர சஹலை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

வெற்றி குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், “புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. முதல் மூன்று ஓவர்களை மிக சிறப்பாக வீசி எங்களுக்கு நம்பிக்கை கொடுத்ததன் காரணமாகவே அறிமுக வீரரான குல்தீப் சென்னிற்கு கடைசி ஓவரை கொடுத்தோம், அவரும் மிக சிறப்பாக பந்துவீசிவிட்டார். 

சிம்ரன் ஹெட்மையர் எங்கள் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராகி விட்டார், திறமையான கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர். யுஸ்வேந்திர சாஹல் எங்கள் அணியின் மிகப்பெரும் பலம். அவரை நம்பி எந்த ஓவரை வேண்டுமானாலும் கொடுக்கலாம், எந்த ஓவர் கொடுத்தாலும் அதை சரியாக வீசுவதற்கு சாஹல் எப்பொழுதும் தயாராகவே இருப்பார். லக்னோ அணிக்கு எதிரான இந்த வெற்றிக்கு சாஹலின் பங்களிப்பே மிக முக்கிய காரணம்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement