Advertisement

ஜோஷுவா லிட்டிலை பிரித்து மேய்ந்த சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 18 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement
ஜோஷுவா லிட்டிலை பிரித்து மேய்ந்த சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி!
ஜோஷுவா லிட்டிலை பிரித்து மேய்ந்த சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 20, 2023 • 10:15 PM

இந்திய அணி பும்ரா தலைமையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 20, 2023 • 10:15 PM

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் வெளியேறினார். இந்தப் போட்டியிலும் மூன்றாவது இடத்தில் வந்த திலக் வர்மா ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் இந்த முறை மிகவும் பொறுப்பாக ஆரம்பத்தில் விளையாடினார். இன்னொரு முனையில் ருத்ராஜ் பார்ட்னர்ஷிப்பை கொண்டு செல்வதற்கு மட்டுமே கவனம் செலுத்தி ஆடினார்.

Trending

இந்த நிலையில் இந்த ஜோடி பத்து ஓவர்களை பொறுமையாக விளையாடி 81 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து பதினொன்றாவது ஓவரை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் அயர்லாந்து வீரர் ஸ்டூவர்ட் லிட்டில் வீச வந்தார். இரண்டாவது பாதி ஆட்டத்தில் ரன் வேகத்தை அதிகரிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்ட சஞ்சு சாம்சன், அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு அசத்தினார். அடுத்து ஒரு சிக்ஸரையும் அட்டகாசமாக நொறுக்கினார்.

அந்த இடத்திலிருந்து இந்திய அணியின் ரன் வேகம் அதிகரித்தது. சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ருதுராஜ் 43 பந்துகளில் பொறுப்பாக விளையாடி 58 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. இதற்கடுத்து ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் 38 மற்றும் 22* ரன்கள் எடுக்க இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் சேர்த்தது. 

 

சிறப்பாக அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தது. இந்நிலையில் ஜூஷுவா லிட்டில் ஓவரில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement