
Sanju Samson lends a helping hand to young Kerala footballer (Image Source: Google)
கேரளாவைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரரான ஆதர்ஷ், ஸ்பெயினில் 5ஆவது டிவிஷன் பிரிவில் கால்பந்துப் பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்குச் செல்லவுள்ளார். ஒரு மாதப் பயிற்சியில் அவரால் 5 போட்டிகளில் விளையாட முடியும்.
அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டால் ஸ்பெயின் கிளப்புகளில் தேர்வாகவும் வாய்ப்புண்டு. எனினும் ஸ்பெயினுக்குச் சென்று பயிற்சி எடுக்கு அளவுக்கு நிதி வசதி இல்லாததால், கேரள அமைச்சர் சாஜி செரியனிடம் உதவி கோரினார் ஆதர்ஷ். இதனால் அவருடைய நிலைமை மற்றவர்களுக்குத் தெரிய வந்தது.
கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்குத் தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள். தனியார் கிளப் ஒன்று ரூ. 50,000 அளித்த நிலையில் கேரள அமைச்சர் சாஜி செரியனும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஆதர்ஷுக்கு நிதியுதவி செய்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021