
Sanju Samson will be playing his 100th T20 match for Rajasthan Royals (Image Source: Google)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்றாலே சஞ்சு சாம்சன் தான் ஞாபகத்துக்கு வருவார். ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி கடந்த மூன்று வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 2019இல் 7ஆம் இடம், 2020இல் 8ஆம் இடம், 2021இல் 7ஆம் இடம் எனப் புள்ளிகள் பட்டியலில் இடம்பிடித்தது.
இதனால் இந்த வருடம் அந்த அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஹால், அஸ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஜேம்ஸ் நீஷம் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளார். 27 வயது சஞ்சு சாம்சன், 2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகப் பணியாற்றினார்.
2012இல் கேகேஆர் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்தது. அதன்பிறகு முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் ராஜஸ்தான் அணியின் அடையாளங்களில் ஒன்றாக மாறினார் சஞ்சு சாம்சன்.