 
                                                    ரஞ்சி கோப்பைய் தொடரில் மும்பை அணிக்காக ஆடிவரும் அதிரடி வீரர் சர்ஃபராஸ் கான். 2019-2020 ரஞ்சி தொடரிலிருந்து அபாரமாக ஆடிவருகிறார். அந்த சீசனில் 6 போட்டிகளில் 928 ரன்களை குவித்தார் சர்ஃபராஸ் கான். அதில் ஒரு முச்சதமும்(301) அடக்கம்.
2021ஆம் ஆண்டு ரஞ்சி தொடர் கரோனா காரணமாக நடக்கவில்லை. இந்த ஆண்டு நடந்துவரும் ரஞ்சி தொடரிலும் அபாரமாக விளையாடி வருகிறார். ஐபிஎல்லுக்கு முன் ரஞ்சி லீக் போட்டிகள் நடந்தன. சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் 275 ரன்களை குவித்த சர்ஃபராஸ் கான், கோவாவுக்கு எதிராக 63 மற்றும் 48 ரன்கள் அடித்தார். ஒடிசாவுக்கு எதிராக 165 ரன்களை குவித்தார்.
ஐபிஎல் முடிந்தநிலையில், இப்போது காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. மும்பையும் உத்தரகாண்ட் அணியும் ஆடிவரும் காலிறுதி போட்டியில் 153 ரன்களை குவித்தார் சர்ஃபராஸ் கான். இது முதல் தர கிரிக்கெட்டில் சர்ஃபராஸின் 7ஆவது சதம்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        