
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் ஜொஹன்னஸ்பர்க்கில் திங்கள் அன்று தொடங்கியது.
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் 50, அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டுகளும் ரபாடா, ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
தென் ஆபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்தது. பீட்டர்சன் 62, பவுமா 51 ரன்கள் எடுத்தார்கள். ஷர்துல் தாக்குர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 60.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விஹாரி ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். ரஹானே 58, புஜாரா 53 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ரபாடா, என்கிடி, ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.