காமன்வெல்த் டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு!
2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆட்டவணை இன்று வெளியானது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 2020ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மகளிர் கிரிக்கெட் அணிகள் விளையாடும் டி20 கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த காமன்வெல்த் கமிட்டி முடிவு செய்துள்ளது.
அதன்படி எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடர் 2022ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை நடத்தப்படும் என்றும், அனைத்து போட்டிகளும் எட்ஜ்பஸ்டன் மைதானங்களில் நடைபெறும் என்றும் காமன்வெல்த் கமிட்டி அறிவித்துள்ளது.
Trending
இத்தொடரின் லீக் ஆட்டங்கள் ஆகஸ்ட் 4ஆம் தேதிவரையும், அரையிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 6ஆம் தேதியும், இறுதிப்போட்டி மற்றும் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டிகள் ஆகஸ்ட் 7ஆம் தேதியும் நடைபெறுமென காமன்வெல்த் கமிட்டி அறிவித்துள்ளது.
இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் தொடர் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளது. முன்னதாக 1998ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் போது ஆடவர் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு, அதில் தென் ஆப்பிர்க்க அணி தங்கப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டு நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் எட்டு அணிகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படவுள்ளது.
முன்னதாக இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஏழு அணிகள் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now