
Schedule For India's Tour Of New Zealand Ahead Of 2022 ODI World Cup Announced (Image Source: Google)
அடுத்த ஆண்டு நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் இப்போதிலிருந்தே தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் இந்திய மகளிர் அணியும் தயாராகி வருகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி அடங்கிய தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இடம் மற்றும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.