
Scotland brush off PNG in tri-series opener (Image Source: Google)
ஸ்காட்லாந்து - பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி 4.7 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சாட் சொபர் 46 ரன்களைச் சேர்த்தார். ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஹம்ஸா தாஹிர், கவின் மெய்ன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கைத் துரத்திய ஸ்காட்லாந்து அணிக்கு மேத்யூ கிராஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினார். இதில் அரைசதம் அடித்த அவர், 70 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.