
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று முல்தானில் 3வது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் 23 வயதான இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாநவாஸ் தஹானி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி அவருக்கு கேப் கொடுத்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஸமானும் இமாம் உல் ஹக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஃபகர் ஜமான் 35 ரன்கள் அடித்தார். பாபர் அசாம் ஒரு ரன்னிலும், ரிஸ்வான் 11 ரன்னிலும், முகமது ஹாரிஸ் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த இமாம் உல் ஹக் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 117 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி.