SL vs PAK, 1st Test: அப்துல்லா ஷஃபிக் சதம்; வெற்றியை நோக்கி பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 4ஆம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் கேலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களும் பாகிஸ்தான் அணி 218 ரன்களும் எடுத்தன.
அதன்பின் 3ஆம் நாள் முடிவில் இலங்கை அணி, 2ஆவது இன்னிங்ஸில் 96 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. சண்டிமல் 86 ரன்களுடனும், ஜெயசூர்யா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
Trending
இதையடுத்து 4ஆம் நாளான இன்று இலங்கை அணி 2ஆவது இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் தினேஷ் சண்டிமல் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் டெஸ்டில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 342 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி 29 ஓவர்கள் வரைக்கும் தாக்குப்பிடித்தார்கள். 22 வயது தொடக்க வீரர் அப்துல்லா சஃபிக், 238 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 2ஆவது டெஸ்ட் சதம்.
கேப்டன் பாபர் ஆஸம் 55 ரன்களுடன் ஜெயசூர்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலக்கை அற்புதமாக விரட்டிய பாகிஸ்தான் அணி, 4ஆம் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அப்துல்லா சஃபிக் 112, முகமது ரிஸ்வான் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
பாகிஸ்தான் அணிக்கு 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் கடைசி நாளன்று வெற்றி பெற 120 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் நாளைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now