Advertisement

PAK vs AUS, 3rd Test: மீண்டும் ஏமாற்றிய வார்னர், கவாஜா!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைச் சேர்த்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 21, 2022 • 12:55 PM
Shaheen Afridi's Sensational Opening Burst Gets Warner, Labuschagne In One Over
Shaheen Afridi's Sensational Opening Burst Gets Warner, Labuschagne In One Over (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.

Trending


இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - உஸ்மான் கவாஜா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 31 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement