
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு நாட்டினைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு முதலில் சில சீசன்களில் ஐபிஎல் விளையாட அனுமதி இருந்தாலும் அதற்கு அடுத்து இரு நாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படாமல் இருந்து வருகிறார்கள்.
அதே வேளையில் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடர் போன்ற போட்டிகளில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் மோதிக் கொள்கின்றனர். இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மீது எப்பொழுதுமே அதிக அளவு எதிர்பார்ப்பு எழும் அந்த வகையில் தற்போது துபாயில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த வேளையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முடிந்த இந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் டி20 உலக கோப்பை போட்டியின் போது 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் இந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.