இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன்? ஜெஷ் ஷாவுக்கு அஃப்ரிடி கேள்வி!
டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதுவதற்கு முன்பாக இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன் என்று ஜெய் ஷா’வுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று விளையாட அனுமதிப்பதில்லை.
2012ஆம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடவில்லை. 2006ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.
Trending
அடுத்த ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு அனுமதித்தால் தான் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியும்.
இந்நிலையில் இன்று நடந்த பிசிசிஐ பொதுக்குழுவில் அடுத்த ஆண்டு நடக்கும் ஐசிசி தொடர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பல ஆலோசனைகள் நடந்தன.
பிசிசிஐ பொதுக்குழுவுக்கு பின் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடும் விஷயத்தில் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. 2023 ஆசிய கோப்பை தொடர் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்றார் ஜெய் ஷா.
இந்நிலையில் பிசிசிஐ-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்திய அணி ஒருவேளை பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இருந்து பாகிஸ்தான் விலகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது எனவும், அதிலிருந்து விலகுவதாகவும் முடிவெடுத்துள்ளது. இதனால் இப்பிரச்சை தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் புதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் இந்த நிலையில் பாட்டிற்கு பாகிஸ்தான் அணி முன்னாள் வீர்ரகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “கடந்த 12 மாதங்களில் இரு தரப்புக்கும் இடையே சிறந்த தோழமை ஏற்படுத்தப்பட்டு, 2 நாடுகளில் நல்ல உணர்வை ஏற்படுத்திய நிலையில், டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக பிசிசிஐ செயலாளர் ஏன் இந்த அறிக்கையை வெளியிடுகிறார் ? இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now