
உலகெங்கிலும் நடைபெற்று வரும் கிரிக்கெட் லீக் தொடர்கள் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது அமெரிக்காவிலும் கிரிக்கெட்டின் அலை வீசி வருகிறது. 2024 ஆம் வருடத்திற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு விதமான டி20 மற்றும் டி10 கிரிக்கெட் போட்டிகள் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் தான் மேஜர் லீக் டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது . இதில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு யூ எஸ் மாஸ்டர் லீ கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கியது.
இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணியும் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான நியூயார்க் வாரியர்ஸ்அணியும் மோதின. இந்தப் போட்டி மலையின் காரணமாக 5 அவர்களை கொண்டதாக நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூயார்க் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.