Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன்களாக ஷாய் ஹோப் மற்றும் ரொவ்மன் பாவெல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan February 16, 2023 • 13:53 PM
Shai Hope and Rovman Powell take charge as West Indies white-ball captains
Shai Hope and Rovman Powell take charge as West Indies white-ball captains (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் ஒரு பேட்டராகவும் அவர் பங்களிப்பு அந்த தொடரில் மோசமாகவே இருந்தது.

அதன்பின் அந்த அணி எந்தவொரு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தது. இதையடுத்து வரும் மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

Trending


இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன்களை நியமித்துள்ளது.  அதன்படி ஒருநாள்  போட்டி அணிக்கு ஷாய் ஹோப், டி20 அணிக்கு ரோவ்மேன் பவலும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement