Advertisement

ஐபிஎல் 2021: ஆல்டைம் பெஸ்ட் லெவனை அறிவித்த ஷகிப் அல் ஹசன்!

ஐபிஎல் தொடரில் தனது ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணியை வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan September 14, 2021 • 17:25 PM
shakib-al-hasan-all-time-ipl-xi
shakib-al-hasan-all-time-ipl-xi (Image Source: Google)
Advertisement

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் நடக்கின்றன. இதற்காக அனைத்து அணிகளும் அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வங்கதேச அணி வீரர் ஷகிப் அல் ஹசன், ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.

Trending


அவரது அணியில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள ஷகிப் அல் ஹசன், 3ஆம் வரிசையில் கோலியையும், 4ஆம் வரிசை வீரராக ரெய்னாவையும் தேர்வு செய்துள்ளார். 

அதிரடி மன்னர்களும், ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களுமான கிறிஸ் கெய்ல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரையும் அவர் தனது அணியில் எடுக்கவில்லை.

விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்த ஷகிப் அல் ஹசன், அவரையே கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். 2008ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியை வழிநடத்திவரும் தோனி, 3 முறை அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருப்பதுடன், ஒரேயொரு சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு சிஎஸ்கேவை அழைத்து சென்றுள்ளார்.

அதன்பின் 6ஆம் வரிசையில் கேஎல் ராகுலையும், ஆல்ரவுண்டர்களாக பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள ஷகிப் அல் ஹசன், வேகப்பந்து வீச்சாளராக லசித் மலிங்கா, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் பெஸ்ட் லெவன்: ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, லசித் மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement