டி20 உலகக்கோப்பை: மலிங்கா சாதனையை முறியடித்த ஷாகிப் அல் ஹசன்!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் இன்று தொடங்கிய நிலையில், முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேசம் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன், 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை வீரர் மலிங்காவின் சாதனையை முறியடித்தார். மொத்தம் 80 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஷாகிப் அல் அசன், மொத்தம் 108 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். மலிங்கா 107 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மேலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். உலக சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now