வங்கதேச கிரிக்கெட் அணிக்காக அதிக விக்கெட்டுகள் - ஷாகிப் அல் ஹசன் சாதனை!
வங்கதேச கிரிக்கெட் அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் எனும் சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமானவர் ஷாகிப் அல் ஹசன். இவர் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதன்மூலம் வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஷாகிப் படைத்துள்ளார். முன்னதாக அந்த அணியின் முன்னாள் கேப்டம் மொர்டாசா 269 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
தற்போது அதனை ஷாகிப் அல் ஹசன் முறியடித்து புது சாதனையை படைத்துள்ளார். இதுவரை வங்கதேச அணிக்காக 213 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகிப் அல் ஹசன் 274 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now