
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதையடுத்து, நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன.
வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், தமிம் இக்பால் , எபடோட் ஹொசைன் போன்ற மூத்த வீரர்கள் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவில்லை. லிட்டன் தாஸ் தீவிர காய்ச்சல் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக தமிம் இக்பால், எபடோட் ஹொசைன் அணியில் இடம்பெறவில்லை