
Shakib Al Hasan returns as Bangladesh name squad for first two ODIs against Sri Lanka (Image Source: Google)
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இலங்கை அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, வங்கதேசம் சென்றுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிம் இக்பால் தலைமையிலான வங்கதேச அணி சௌமியா சர்கார், முஸ்தபிசூர் ரஹ்மான், முஸ்பிக்கூர் ரஹீம், மெஹதி ஹசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.