
Shakib Al Hasan Ruled Out Of T20 World Cup (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் குரூப் 1 பிரிவில் வங்கதேசம் இடம்பிடித்துள்ளது.
அந்த அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அடுத்ததாக அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.