
'Shame there's only one Test', says Sarah Taylor as Aus-Eng game ends in thrilling draw (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று முடிவடைந்தது.
இப்போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியானது போராடி தோல்வியைத் தவிர்த்தது. மேலும் இப்போட்டியானது ரசிகர்களின் பரபரப்புக்கு எந்த குறையும் வைக்காமல் இறுதிவரை ஆட்டத்தில் அனல் பறந்தது.
மேலும் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்போட்டி மிகவும் பரபரப்பு நிறைந்த போட்டியாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. காரணம் இரு அணிகளும் ஏறத்தாழ வெற்றியின் அருகில் சென்றது தான்.