
Shane Warne Left 'Battered And Bruised' After Bike Accident (Image Source: Google)
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே. இந்நிலையில் இவர் இன்று சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.
வார்னே தனது மகனுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, அதிலிருந்து கீழே விழுந்து 15 அடிக்கு சறுக்கிக்கொண்டு சென்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் ஷேன் வார்னேவுக்கும் அவரது மகனுக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.