Advertisement

சச்சின் கருத்துக்கு வார்னே ஆதரவு!

சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் விடுத்த கோரிக்கை குறித்து ஐசிசி குழுவிடம் முறையிடுவதாக ஷேன் வார்னே கூறியுள்ளார்.

Advertisement
Shane Warne reacts to Sachin Tendulkar’s suggestion on law change as Ben Stokes has lucky escape
Shane Warne reacts to Sachin Tendulkar’s suggestion on law change as Ben Stokes has lucky escape (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 07, 2022 • 07:56 PM

ஆஷஸ் தொடரின் 4ஆவது டெஸ்ட், சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 31ஆவது ஓவரை கிரீன் வீசினார். அவருடைய முதல் பந்து ஸ்டோக்ஸை போல்ட் செய்தது. ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டதே தவிர பைல்ஸ் கீழே விழவில்லை. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 07, 2022 • 07:56 PM

நடுவர் பால் ரீஃபில், பந்து ஸ்டோக்ஸின்  காலில் பட்டது என்று நினைத்து எல்பிடபிள்யூவுக்கு அவுட் கொடுத்தார். இதை 3-வது நடுவரிடம் முறையீடு செய்தார் ஸ்டோக்ஸ். ரீபிளேவில் தான் பந்து ஸ்டம்பில் பட்டு பைல்ஸ் கீழே விழாமல் இருந்தது தெரிய வந்தது. 

Trending

இதனால் தப்பித்த ஸ்டோக்ஸ் தொடர்ந்து விளையாடி 66 ரன்கள் எடுத்துக் கடைசியில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்து ஸ்டம்பில் பட்டும் பைல்ஸ் கீழே விழாத சம்பவம் கிரிக்கெட் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தருணங்களில் பேட்டரை அவுட்டாக்கி வெளியேற்ற வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர், ட்விட்டரில் கூறியதாவது, “பந்து ஸ்டம்புகளில் மோதி பைல்ஸ் கீழே விழவில்லையென்றால் ஸ்டம்புகளில் மோதிய பந்து என (விக்கெட்டை அளிக்கும்) ஒரு விதிமுறையை அறிமுகப்படுத்த வேண்டுமா? எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? பந்துவீச்சாளர்களுக்கு நியாயமாக நடந்துகொள்வோம்” என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் சச்சினின் ட்வீட்டுக்குப் பதில் அளிக்கும் விதமாக முன்னாள் வீரர் ஷேன் வார்னே, “முக்கியமான குறிப்பு இது. இதை விவாதிக்க வேண்டும் நண்பரே. உலக கிரிக்கெட் குழுவிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு செல்கிறேன். அதன் முடிவுகளை உங்களிடம் தெரிவிக்கிறேன். இதுபோல நான் பார்த்தது இல்லை. கிரீன் மணிக்கு 142 கி.மீ. வேகத்தில் பந்துவீசினார். ஸ்டம்பைப் பந்து பலமாகவே தாக்கியது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement