
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் சரணடைந்தது. ஷர்துல் தாகூர் அருமையாக பந்துவீசி இந்திய அணிக்கு தேவைப்பட்ட போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியை 229 ரன்களுக்கு சுருட்ட உதவினார். அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த அபாரமான பந்துவீச்சின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை தகர்த்துள்ளார் ஷர்துல் தாகூர். 7/61 என்ற ஷர்துல் தாகூரின் பவுலிங் தான் தென் ஆப்பிரிக்காவில் ஒரு இந்திய பவுலரின் மிகச்சிறந்த ஸ்பெல். இதற்கு முன்பாக 2010-2011 சுற்றுப்பயணத்தில் கேப்டவுனில் ஹர்பஜன் சிங்கின் 7/120 என்ற ஸ்பெல் தான் தென் ஆப்பிரிக்காவில் இந்திய பவுலரின் சிறந்த பவுலிங்காக இருந்தது. ஹர்பஜன் சிங்கின் அந்த சாதனையை தகர்த்தார் ஷர்துல் தாகூர்.