-mdl.jpg)
Shardul, Kuldeep Helps India A Beat New Zealand A By Seven Wickets In First One-Day Game (Image Source: Google)
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா ஏ அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் சென்னையில் நடந்துவருகிறது.
இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ஏ அணியில் பின்வரிசையில் களமிறங்கிய ரிப்பான் மட்டும் அரைசதம் அடித்தார். அவர் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜோ வால்கர் 36 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 40.2 ஓவரில் வெறும் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.