Advertisement
Advertisement
Advertisement

ஆல் டைம் சிறந்த லெவனை அறிவித்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஷான் டைட், 4 இந்திய வீரர்களை உள்ளடக்கிய தனது ஆல்டைம் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 14, 2021 • 10:45 AM
Shaun-tait-picks-his-all-time-odi-xi-leaves-out-viv-richards
Shaun-tait-picks-his-all-time-odi-xi-leaves-out-viv-richards (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட். 2005ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஷான் டைட், அந்த அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 35 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரான ஷான் டைட், தனது ஆல்டைம் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார். ஆல்டைம் ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரையும் தேர்வு செய்தார்.

Trending


3ஆம் வரிசை வீரராக ஆஸ்திரேலிய அணிக்கு 2 உலக கோப்பைகளை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டனான ரிக்கி பாண்டிங்கையும், 4ஆம் வரிசையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார்.

5ஆம் வரிசையில் பிரயன் லாரா, 6ஆம் வரிசையில் விராட் கோலியைத் தேர்வு செய்த டைட், அணியின் ஃபினிஷராக மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார். 

அவரது அணியின் ஸ்பின்னராக ஷேன் வார்னையும், வேகப்பந்துவீச்சாளர்களாக வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத், ஷோயப் அக்தர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஷான் டைட் தேர்வு செய்த ஆல்டைம் ஒருநாள் லெவன்: வீரேந்திர சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, விராட் கோலி, தோனி, ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத், ஷோயப் அக்தர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement