
Shivnarine Chanderpaul appointed as batting consultant for West Indies Rising Stars U19 (Image Source: Google)
அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தங்கள் அணிகளை தீவிரமாக தயார்ப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 அணியும் தங்கள் அணியை தயார்படுத்தும் வகையில், அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலை நியமித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 164 டெஸ்ட், 268 ஒருநாள், 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சந்தர்பால், 20ஆயிரத்திற்கு அதிகமான ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.