Advertisement

டி20 உலகக்கோப்பை: எங்களது கோபம் இந்தியா மீது இல்லை; நியூசிலாந்து தான் இலக்கு - சோயிப் அக்தர்

பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து மீதுதான் எங்களுக்குக் கோபம் உள்ளது, இந்தியா மீது அல்ல என முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 23, 2021 • 12:03 PM
Shoaib Akhtar Says Pakistan's Real Anger Is Not With India But With New Zealand
Shoaib Akhtar Says Pakistan's Real Anger Is Not With India But With New Zealand (Image Source: Google)
Advertisement

கடந்த மாதம் பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

எனினும் போட்டி தொடங்கும் தினத்தன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 போட்டிகளில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. 

Trending


இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதமாக மாறியது. மேலும் பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் நியூசிலாந்தின் செயலை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து  டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதுகின்றன. 

இதை முன்னிட்டு பேசிய பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர்,“எங்களுடைய உண்மையான கோபம் நியூசிலாந்து மீதுதான். அவர்களைத் தோற்கடிக்க விரும்புகிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. 

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியாவுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். மைதானம் முழுக்க இந்திய ரசிகர்கள் இருப்பார்கள். உங்களுடைய தொலைக்காட்சி ஊழியர்கள் இருப்பார்கள். அதனால் இதில் தோற்றால் எங்களுக்குப் பிரச்னை இல்லை. 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்துவிட்டால் மிகப்பெரிய வீரர்களுக்கும் தடுமாற்றம் ஏற்படும். ஆட்டத்தில் பாகிஸ்தானை விடவும் இந்தியா நிலைமையை நன்குக் கையாண்டால் நல்லது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement