Advertisement

ஆசிய கோப்பை 2022: தோல்விக்கு காரணம் இதுதான் - சோயப் அக்தர்!

ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரே தவறு என்று சோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 29, 2022 • 17:35 PM
Shoaib Akhtar slams India and Pakistan's performance in Asia Cup encounter
Shoaib Akhtar slams India and Pakistan's performance in Asia Cup encounter (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனும் நட்சத்திர வீரருமான பாபர் அசாமை வெறும் 10 ரன்களுக்கு 3வது ஓவரிலேயே வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். ஃபகர் ஜமானும் 10 ரன்களில் அவுட்டானார். பாபர் அசாம் அவுட்டானதால் முகமது ரிஸ்வானால் தனது இயல்பான ஆட்டத்தை ஆடமுடியவில்லை. மந்தமாக பேட்டிங் ஆடிய ரிஸ்வான் 42 பந்தில் 43 ரன்கள் அடித்தார். 

Trending


பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரர்கள் மூவரில் ஒருவரும் சரியாக ஆடாததால் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 148 ரன்கள் என்ற இலக்கை அடித்து அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு தவறான பேட்டிங் ஆர்டர் தான் காரணம் என்று முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சோயப் அக்தர், “ரிஸ்வான் பந்துக்கு நிகரான ரன் அடித்தால் என்ன செய்வது..? பவர்ப்ளேயில் 19 டாட் பந்துகள். நிறைய டாட் பந்துகள் ஆடினாலே ரொம்ப கஷ்டம் தான். இரு அணிகளின் கேப்டன்களுமே அணி தேர்வில் தவறு செய்தனர். இந்திய அணி ரிஷப் பண்ட்டை எடுக்காதது தவறு.

பாகிஸ்தான் அணியின் 4ஆவது பேட்ஸ்மேனே இஃப்டிகார் அகமது தான். நான் இஃப்டிகாரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் நான் பலமுறை கூறியிருக்கிறேன். பாபர் ஆசாம் ஓபனிங்கில் இறங்கக்கூடாது. பாபர் அசாம் 3ஆம் வரிசையில் இறங்கி கடைசிவரை நிலைத்து நின்று ஆடவேண்டும். 

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. எனவே பாகிஸ்தான் வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை நன்றாக ஆட கற்றுக்கொள்ள வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement