
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு 14ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாட இரண்டாவது அணியாக செல்லப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 135 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கு சென்றது. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாட இருக்கிறது.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில், “நாங்கள் இந்த போட்டியின் கடைசி நான்கு ஓவர்களில் நடந்த நிகழ்வை மறக்க விரும்புகிறோம். எங்களது தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருப்பினும் இறுதியில் போராடி வெற்றி பெற்றுவிட்டோம். இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற சுவாரசியமான கிரிக்கெட் போட்டிகளில் இறுதிநேர வெற்றி என்பது முக்கியமான ஒன்றுதான்.