
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஹெட்மையரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஹெட்மையர் 61 ரன்கள் சேர்த்தார்.
இதன்பின் சவாலாக இலக்கை நோக்கி களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் சாதனை படைத்து அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அனைத்து ஓவர்களிலும் பவுண்டரி, சிக்சர் அடிக்கப்பட்டு கொண்டே இருந்தது. இதனால் இந்திய அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டல் வெற்றியை பெற்றது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 84 ரன்களும், ஷுப்மன் கில் 47 பந்துகளில் 77 ரன்களும் குவித்தனர்.
இந்த வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “இந்தப் போட்டியை பார்க்க ஏராளமான இந்திய ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன். ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி இருவரின் திறமை மீதும் எங்களுக்கு கொஞ்சம் கூட எந்த சந்தேகமும் இல்லை. என்னை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் குழுவாக இணைந்து பொறுப்பேற்று, பந்துவீச்சாளர்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட்டின் எந்த வடிவமாக இருந்தாலும் பந்துவீச்சாளர்களால் தான் வெற்றியை கொடுக்க முடியும்.