
Simi Singh, Ben White test positive for COVID-19, ruled out of first ODI against WI (Image Source: Google)
அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீசி வருகிறது.
இதற்கிடையில் இன்றைய போட்டி தொடங்கும் முன் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் அயர்லாந்து அணியைச் சேர்ந்த சிமி சிங், பென் வைட் ஆகியோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.