
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. அகமதாபாத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
இந்த சீசனில் ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தேவையற்ற ஒருசாதனையை நிகழ்த்தியுள்ளார்.ஆர்சிபி அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் விலைக்கு வாங்கியது. நடப்பு ஐபிஎல் சீசனில் சிராஜ் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்கப்பட்டது. ஆனால், சிராஜின் பந்துவீச்சு இந்த சீசனில் சொதப்பலாகஅமைந்து நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் ஒரு போட்டியிலிருந்து கூட சிராஜை நீக்கும் சூழல் ஏற்பட்டது.
இருப்பினும் ப்ளேஆஃப் சுற்றில் அனுபவமான வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்பதற்காக ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிராஜ் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.