ஆஸி தொடருக்கு பிறகு சிராஜின்ஆட்டம் அபாரமாக உள்ளது - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரெலிய தொடருக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஆட்டம் சிறப்பானதாக உள்ளதென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையர் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு, ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் முகமது சிராஜ் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளர்.
Trending
இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கு பின் சிராஜின் ஆட்டம் ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்னேற்றமடைந்து வருகிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு முகமது சிராஜ் ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய திறனை நிரூபித்து வருகிறார். அதிலும் ஐபிஎல் தொடரின் போது இறுதி கட்ட ஓவர்களில் அவரது பந்துவீச்சு அணிக்கு பலமுறை வெற்றியை தேடித் தந்துள்ளது. அதேபோல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படுவார்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now