Advertisement

AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 09, 2024 • 16:09 PM
AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு!
AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளனர்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Trending


ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடி லாரா வோல்வார்ட் தலைமையிலான இந்த அணியில் 6 அறிமுக வீராங்கனைகளுக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுத்துள்ளது. 

அதன்படி அதிரடி வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸ், வேகப்பந்து வீச்சாளர்கள் மசபடா கிளாஸ்ம் அயன்டா ஹ்லுபி, அத்துடன் ஆல்-ரவுண்டர்கள் எலிஸ்-மாரி மார்க்ஸ், டெல்மி டக்கர் ஆகியோருடன் விக்கெட் கீப்பர் மைக் டி ரிடர் ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அனுபவ வீராங்கனைகள் மரிஸான் கேப், சுனே லூஸ், சோலே ட்ரையான், நடின் டி கிளார்க் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளார்க், மைக் டி ரிடர், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜாஃப்டா, மரிசான் கேப், மசபடா கிளாஸ், சுனே லூஸ், எலிஸ்-மேரி மார்க்ஸ், நோன்குலுலெகோ மலாபா, சோலெ ட்ரையன், டெல்மி டக்கர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement